பாதிரியாரால் சிறு வயதில் சீரழிக்கப்பட்ட நபர்: மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கிய தேவாலயம்
அமெரிக்காவில் நபர் ஒருவர் தொடர்ந்த துஸ்பிரயோக வழக்கை முடித்து வைக்க செயின்ட் லூயிஸ் ரோமன் கத்தோலிக்க பேராயர் ஒருவர் 1 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய நபரை சிறுவயதில் பாதிரியார் ஒருவர் சீரழித்துள்ளதாகவும், அந்த பாதிரியார் இதுபோன்ற ஒரு வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் கூறப்படுகிறது.
கத்தோலிக்க பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்த நபர் மிசோரி மாகாணத்தில், செஸ்டர்ஃபீல்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் பலிபீட சிறுவனாக இருந்துள்ளார். இந்த நிலையில் Gary Wolken என்ற பாதிரியாரால் 1993 காலகட்டத்தில் சீரழிக்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
1995 வரையில் இந்த கொடூரம் நீடித்ததாகவும், அந்த நினைவுகள் இளைஞரான பின்னரும் தம்மை துன்புறுத்தியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 2018ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் தற்போது முடிவு வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இழப்பீடு கோரி பலர் வழக்கு தொடர்ந்த நிலையில், அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்கள் மற்றும் பிற கத்தோலிக்க நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்க சட்ட உதவிகளையும் தேடியது.
இந்த நிலையில் தான் செயின்ட் லூயிஸ் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் பாதிக்கப்பட்ட நபருக்கு 1 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. மேலும், இந்த தீர்வு பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓரளவு ஆறுதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
பாதிரியார் வோல்கனுக்கு தற்போது 57 வயது. 1997 முதல் 2000 வரை மற்றொரு செயின்ட் லூயிஸ் பகுதி சிறுவனை துஸ்பிரயோகம் செய்ததற்காக 2003ல் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2003 முதல் 2015 வரை சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.