நேபாளத்தில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலி
நேபாளத்தின், தோலாக்கா மாவட்டத்தில் உள்ள ரோல்வாலின் மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நான்கு நேபாள மலையேறுபவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை, கடும் பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த மேக மூட்டங்கள் காரணமாக மீட்புப் பணிகளுக்காக வானூர்த்திகளை அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாக தோலாக்கா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பனிப்பொழிவு தணிந்த பின்னர் மீட்பு குழுவினர் மீண்டும் மீட்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.