கனடாவிற்குள் தற்செயலாக நுழைந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கனடாவிற்குள் தற்செயலாக நுழைந்த மெக்ஸிக்கோ பிரஜை ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரிக்கோ ஜிமினெஸ் மாரிடினேஸ் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான மாரிடினேஸ் போதைப் பொருட்களை வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரிடினேஸ் அரிசோனாவிலிருந்து மிச்சிகன் நோக்கிப் பயணித்த போது, தவறுதலாக கனடிய எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு சோதனையிட்ட போது சுமார் இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பலர் எல்லையை தவறுதலாக கடப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.