பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் ; பலர் காயம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த சம்பவத்தில் ஏழு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு காடு மற்றும் நதி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணை மற்றும் சூழ்நிலை மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திடீர் கரடி தாக்குதல் உள்ளூர் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.