“Metaverse game” ஊடாக கூட்டுப்பாலியல் வன்புணர்வு; சிறுமிக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளரீதியாக சித்திரவதை
அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (Artificial Intelligence) மூலம் பல இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
Metaverse game எனப்படுவது செயற்கை நுண்அறிவு விளையாட்டாகும், இதில் பயனர்கள் தத்தமது கதாபாத்திரங்களை (Avatar) தமக்கு ஏற்றவகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயனர்களும் இனந்தெரியாத நபர்களினால் பயனர்களின் கதாபாத்திரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“Metaverse game” எனப்படும் விளையாட்டின் மூலமே குறித்த சிறுமி உடல் ரீதியாக அல்லாமல் உளரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் game மோகத்தால் கூட்டுப்பாலியல் வன்புணர்வால் உள ரீதியாக சிறுமி பாதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.