பாலியல் வல்லுறவு ; மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
ஈரானில் பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் போலியான பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிலையத்தை நடத்தி, பெண்களை அங்கு வரச்செய்து, பின்னர் அவர்களை வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
12 வழக்குகளில் குற்றவாளிகள்
இந்த சம்பவம் மேற்படி 3 ஆண்களும் 12 வழக்குகளில் குற்றவாளிகள் என 2021 ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ உதவியாளர்களான ஒருவர், போலி விளம்பரங்கள் மூலம் 7 பெண்களை மேற்படி போலி சிகிச்சை நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் தாதிகளான ஏனைய இரு ஆண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, மருந்து திருட்டு முதலான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.