அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான பகிர் தகவல்!

Sundaresan
Report this article
சிகாகோ அருகே ஜூலை நான்காம் திகதி அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீது ஏழு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒரு உயர் சக்தி வாய்ந்த துப்பாக்கியிலிருந்து 70 தோட்டாக்களை கூட்டத்தின் மீது சுட்டதாகவும், ஒரு பெண் போல் மாறுவேடமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து, கிரிமோவை பொலிஸார் கைது செய்தனர், மேலும் அவர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற இரண்டாவது துப்பாக்கியுடன் கண்டுபிடித்தனர்.
அவரது வீட்டில் மேலும் 3 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. சந்தேகநபர் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இரண்டு முன் தொடர்புகளை கொண்டிருந்த போதிலும் கடந்த வருடத்தில் ஐந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 2019 இல், அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகக் கூறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது வீட்டிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.
செப்டம்பர் 2019 இல், எல்லோரையும் கொன்றுவிடுவேன் என்று கிரிமோ வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்ததாகக் கூறிய குடும்ப உறுப்பினர் ஒருவரால் காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பொலிஸார் பதில் அளித்து அவரது வீட்டில் இருந்து 16 கத்திகள், வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் கைது செய்யப்படவில்லை, மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிரிமோ புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.