பாரிஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; தாய் - மகள் சடலமாக மீட்பு
பாரிஸின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய் - மகள் சடலமாக மீட்கப்ப்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர் பகுதியான சென்-எ-மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட நேமுர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சிறிய வீடொன்றில் 56 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 17 வயதுடைய மகளும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பொலிஸார் பார்த்துள்ளனர். இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட தாயின் இரண்டாவது மகளான 15 வயதுடைய சிறுமி வீடு திரும்பிய போது சம்பவத்தை கண்டு பொலிஸாரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடயங்களை சேகரித்து வரும் பொலிஸார் வீட்டின் கதவோ ஜன்னலோ உடைத்த அடையாளங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் பதின்ம வயதுடைய சிறுமியின் உடலில் 13 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கமைய இது கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் என பொலிஸார் நீதிமன்றத்தில் தகவல் வழங்கியுள்ளனர். குடும்ப சண்டையின் முடிவில் தாய் மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தாய் ஒரு விதவை பெண் எனவும் 2 மகளுடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. அதேசமயம் குறித்த இரு பெண் பிள்ளைகளின் தாயிற்கு எந்த குற்றப்பின்னணியும் இல்லை விசாரணைகளில் பின்னர் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்திற்கான இறுதி காரணம் இன்னமும் வெளிவராத நிலையில், . இரண்டாவது மகளிடம் மகளிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.