அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு ; 4 பேர் காயம்
அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதன் வளாகத்தில் ஊறடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேர் காயமடைந்துள்ளதுடன், தகவல் அறிந்து பொலிசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதில், ஆயுதங்கள் வைத்திருந்தனர் என கூறி அந்த பகுதியில் இருந்த 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கான குற்றச்சாட்டு எதுவும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. ஒருவர் அனுமதி பெறாத துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கிறார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரைஊறடங்கு தொடரும் என தெரிவித்து உள்ளது.
அவர்கள் இருவரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. இவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.
இதுபற்றி பொலிசார் விசாரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.