கனடாவில் இந்திய நடிகர் உணவகம் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு
கனடாவில் இந்திய பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டலில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறை
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.
எனினும் ஹோட்டல் திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கனடா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.