அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுக்க முயற்சித்துள்ளனர். இதன்போது துப்பாக்கித்தாரி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஆறு பேரும் துப்பாக்கித்தாரியின் குடும்ப உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.