டொராண்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
டொராண்டோவின் நோர்த் யார்க்கில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இரு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 10:25 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் டிரிஃப்ட்வுட் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்பட்ட ஒரு ஆண், மருத்துவ உதவியாளர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்து இல்லாதவை என நம்பப்படுகிறது. மற்றொரு ஆண், சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இரண்டாவது ஆண் துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த விரிவான விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை, இரு ஆண்கள் கருப்பு நிற வாகனத்தில் அந்தப் பகுதியை விட்டு தப்பியோடியதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.