அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ; 3 பேர் பலி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
டெட்ராய்ட் நகரில் இயங்கி வரும் குறித்த கேளிக்கை விடுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் நால்வர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் உடனடியாக அங்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.