கியூபாவில் விடுமுறையைக் கொண்டாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்
கியூபாவில் விடுமுறையை கழிக்கச் சென்ற போது கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கி நேரிட்டதாக கனடாவில் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கனேடிய ஆணொருவர் ஒரு கியூபா ரிசார்ட்டில் தன்னை முகத்தில் குத்திய சம்பவம் தொடர்பில் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வருத்தம் வெளியிட்டுள்ளார்.
கியூபாவில் விடுமுறையில் இருக்கும் போது முகத்தில் தாக்கப்பட்டதாகவும் இந்தக் காயம் இன்னமும் பூரணமாக குணமாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.