இந்தியா மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திய கனடிய அரசியல்வாதி
இந்திய அரசாங்கம் மீது சீக்கிய ஆன்மீக தலைவர் ஹார்தீப் சிங் நிஜாரின் படுகொலையுடன் இந்தியாவிற்கு தொடர்பு உண்டு என கனடிய என்டி பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல்கள் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் செயற்பாட்டினால் கனடிய பிரஜை ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புலனாய்வு தகவல்கள் நம்பகமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீக்கியரான ஜக்மீட் சிங், இந்திய பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் கனடாவின் முன்னணி அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.