அஜாக்ஸில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற பயங்கரம்
கனடாவின் அஜாக்ஸில் இன்றைய தினம் அதிகாலை வேளையில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தென் பகுதியில் அமைந்துள்ள ஹார்வுட் வீதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரெஸ்டுரன்ட் ஒன்றில் விருந்துபசாரமொன்று நடைபெற்றதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவரும் உயிரிழக்கவில்லை எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Investigators are looking for witnesses to come forward as they investigate a shooting at 154 Harwood Ave in Ajax. 6 shooting victims identified at this time. One with life threatening injuries. Happened at rear of a restaurant at 1:20 a.m. More to follow. pic.twitter.com/O3AaDiE0pw
— Durham Regional Police (@DRPS) August 1, 2022
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வாகனமொன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் பால்நிலை பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் காணொளி ஆதாரங்களை திரட்டி அதன் ஊடாக விசாரணகைளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.