துருக்கியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து...இருவர் உயிரிழப்பு
துருக்கியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறிய ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர்.
உனுசெலி விமான நிலையத்திலிருந்து புர்சாவுக்குச் சென்ற இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம், பாக்லார்பசி மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானம் குடியிருப்பு பகுதியில் வெடித்து சிதறும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த பெண் குழந்தையுடன் சரியான நேரத்தில் சென்றதால் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.