பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை!
பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட வரைவை செப்டம்பர் மாதம் 14 திங்கட்கிழமை பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சமூக வலைத்தளமான X-இல் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் இதே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் Conseil constitutionnel எனப்படும் அரசியலமைப்பு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தொழில்நுட்ப ரீதியாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், புதிய சட்ட வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“கடுமையான தொழில்நுட்ப ஆய்வுக்குப் பின்னர், புதிய சட்ட வடிவத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பிப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
Conseil constitutionnel-ன் தீர்ப்புக்கு ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கால சட்டம் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதி செய்வதில் இந்த அறிவிப்பு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.