கனடாவில் சூரிய கிரகணத்தினால் எற்பட்ட பாதிப்பு
கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 8ம் திகதி கனடாவில் சூரிய கிரகணம் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அநேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் அதனை பார்வையிட்டுள்ளனர்.
இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சில இடங்களில் சூரிய கிரணத்தை சிலர் பாதுகாப்பற்ற வழிமுறைகளை பயன்படுத்தியதனால் கண் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.