கனடாவில் விற்பனை செய்யப்பட்ட இந்த வகை உணவு குறித்து எச்சரிக்கை
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட பில்ஸ்பரி நிறுவனத்தின் சில வகை பிஸா பொப்ஸ் தயாரிப்புகள் நுண்ணுயிர் மாசுபாடு சந்தேகத்தால் சந்தையிலிருந்து மீட்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிஸா பொப்ஸ் பெப்பரோனி என்ட் பேகோன், பிஸா பொப்ஸ் சுப்ரிமோ எக்ஸ்ட்ரீம் பெப்பரோனி என்ட் பேகோன், மற்றும் பிஸா பொப்ஸ் பிரான்க் ரெட்ஹொட் பெப்பரோனி என்ட் பேகோன் போன்ற உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளில் ஈகொலி என்ற தீங்கான பாக்டீரியா மாசுபாடு இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
இந்த உணவுப் பொருட்கள் வெளிப்படையாக கெட்டதாகத் தோன்றாமலும், வாசனை மாற்றமின்றியும் இருக்கலாம். ஆனால் அவை உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.