கனடாவில் 46 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி
லொட்டோ 6/49 கோல்ட் போல் இழுப்பில் வெற்றி பெற்ற ஜாக்பாட் லொத்தர் சீட்டு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி டிக்கெட் குயிஸ்நெல் நகரில் விற்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பரிசுத் தொகை அதிகாரப்பூர்வமாக கோரப்படும் வரை, டிக்கெட் விற்கப்பட்ட குறிப்பிட்ட இடம் வெளியிடப்படாது என லொத்தர் சீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
லாட்டரி நிறுவனத்தின் இணையதள தகவலின்படி, வெற்றி எண்கள்: 12706438-43 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டை வைத்திருப்பவர், சீட்டிலுப்பு நடைபெற்ற நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் தமது பெரும் பரிசுத் தொகையை கோர வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இந்த ஆண்டு மட்டும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பத்து மில்லியன் அல்லது அதனைத் தாண்டும் ஜாக்பாட் வென்றது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதத்தில், சர்ரே நகரைச் சேர்ந்த ஒருவர் 80 மில்லியன் டொலர் மதிப்புள்ள லொட்டோ மெக்ஸ் ஜாக்பாட்டை வென்று, கனடா வரலாற்றில் ஒரே நபருக்கான மிகப்பெரிய ஜாக்பாட் சாதனையை படைத்தார்.
அதற்கு சற்று மேற்பட்ட ஒரு மாதத்தில், வான்கூவார் நகரைச் சேர்ந்த ஒருவர் 40 மில்லியன் டொலர் லொட்டோ மெக்ஸ் பரிசை பெற்றார்.
இந்த தொடர்ச்சியான வெற்றிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் லாட்டரி ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளதாக லாட்டரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.