கனடாவிற்கு விஜயம் செய்யும் தென் கொரிய ஜனாதிபதி
தென்கொரிய ஜனாதிபதி யூன் சூக் யியோல்(Yoon Suk Yeol ) கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரம் தென் கொரிய ஜனாதிபதி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் அவர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்டதன பின்னர் முதல் தடவையாக கனடாவிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 22 மற்றும் 23ம் திகதிகளில் அவர் கனடாவில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒட்டாவாவில் வைத்து தென்கொரிய ஜனாதிபதியை பிரதமர் சந்திப்பார் என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சக்தி வளம் தொடர்பிலான உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இரு நாடுகளினதும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.
உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்த விவகாரத்திற்கு இரு நாடுகளினதும் தலைவர்கள் அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளியிடுவர் என தெரிவிக்கப்படுகின்றது.