பஹ்ரைன் நாட்டிற்கு செல்ல இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு
சுற்றுலா விசாவில் மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனுக்கு வந்து வேலை பெற முடியாது என புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் அரசு சுற்றுலா விசாவில் வந்து, தொழில் விசாவாக மாற்றி வேலை செய்யும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டதையடுத்து, இனிமேல் சுற்றுலா விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய நடைமுறைகள் ஜனவரி 14, 2024 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2024 பெப்ரவரி 13 முதல் சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு சென்று வேலைவாய்ப்பு பெறுவது முழுமையாக தடைசெய்யப்பட்டது.
இதன் மூலம், சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனில் வேலை செய்பவர்கள் இனி சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில், சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற அனுமதிக்கும் சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய 60 பஹ்ரைன் தினார் கட்டணத்தை 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரித்து புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த மாற்றம் அனுசரணையாளர் (Sponsor) கொண்ட சில பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.