சோமாலியாவை விட மோசமான நிலையில் இலங்கை
இலங்கையில் தற்போது மருந்துகளுக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டில் 60 சதவீத மருந்துகளை வழங்கவும் களஞ்சிய சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என்பதால் நாட்டில் தேவையான மருந்து பற்றாக்குறைகள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மூன்று அரிய மருந்துகள் உயிர் காக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், தலசீமியா குழந்தைகள் மற்றும் பல்வேறு சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் மருந்து இறக்குமதிக்கான கடனுதவி வழங்குவதில் தாமதம், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் மருந்துகளை மீள்பதிவு செய்தல், புதிய பதிவுகளில் தாமதம் போன்ற காரணங்களால் இந்த மருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.