நாட்டில் உள்ள தெரு மின் விளக்குகள் அணைக்கப்படுமா?
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியினை கையாளும் விதமாக, மின்சார பாவனையை குறைப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சரவைக்கு முன் வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையில், தெருக்களில் உள்ள மின் விலக்குகளை அணைத்து வைப்பது, அலுவலகங்களின் மின் உபகரண பாவனைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட யோசனைகள் அமைச்சரவையில் முன் வைக்கப்படவுள்ள திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மின் வலு அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மின் வலு அமைச்சர் காமினி லொக்குகே கருத்து தெரிவிக்கையில்,
மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் திட்ட மிடப்பட்ட முறைமை ஒன்றின் கீழ் பொருத்தப்படவில்லை. அவற்றை அணைப்பதானால் ஒவ்வொன்றாக அனைக்க வேண்டும்.
அதிவேக பாதைகள், பிரதான தெருக்களில் திட்டமிட்ட முறையில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியும். அவை தொடர்பில் யோசனை ஒன்றினை முன்வைக்க எதிர்ப்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தற்போதைக்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மின்சார தடை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.