ஹோட்டலில் வைத்து மனைவியை கொன்ற இலங்கையர்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் ஈஸ்ட்கோஸ்ட் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியை கொலை செய்த நபர் இலங்கையைர் ஒருவர் சரணடைந்துதான் கொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபர்
இதனையடுத்து அவருக்கு எதிராக சிங்கப்பூர் பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். சிங்கப்பூரின் கட்டொங்கில் உள்ள ஹொலிடே இன் எக்ஸ்பிரசில் தங்கியிருந்த இலங்கையரே தனது மனைவியை குத்திக்கொலை செய்துள்ளார்.
மனைவியை கொன்ற பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்ததை தெரிவித்தவேளையே பொலிஸாருக்கு உண்மை தெரியவந்துள்ளது.
ஹோட்டலிற்கு விரைந்து சென்ற பொலிஸார் உயிரிழந்த மனைவியின் உடலையும், ஹோட்டல்அறையிலிருந்து கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரான இலங்கை கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.