பிரிட்டன் தேர்தலில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்; கிடைக்கவுள்ள பெருமை!
பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார்.
அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையையும் (Uma Kumaran) தனதாக்கிகொண்டுள்ளார்.
அதேவேளை உமா குமரனை (Uma Kumaran) எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிட்டும்.
தேர்தல் அதிகாரி அறிவிப்பு
உமாகுமரன் ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என உமாகுமரன் (Uma Kumaran) தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.
உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் உமாகுமரன் (Uma Kumaran) குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார்.