லண்டனில் இலங்கை இளைஞனின் மோசமான செயல் ; பாரதூரமான ஏழு குற்றச்சாட்டு
பிரித்தானியா புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையின் இளைஞர் ஒருவர்,மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
எனினும்,சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை, குறித்த இலங்கையர் மறுத்துள்ளார் 20 வயதான யாஷின் ஹிமாசார என்ற அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.

ஏழு குற்றச்சாட்டு
இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த ஹிமாசார, கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு மற்றும் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நவம்பர் 1 ஆம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஹிமாசார, புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியான செயிண்ட் கில்ஸ் விருந்தகத்தில் வசித்து வரும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டுக்கு இலங்கை இளைஞன் உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹிமாசாரவை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக விசாரணையை 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு, நீதிபதி ஒத்திவைத்ததாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.