வெளிநாட்டவர்களை இலங்கையர்கள் திருமணம் செய்வதற்கான கட்டுப்பாடு தளர்வு
இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான அனைத்து திருமணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வது தொடர்பான சுற்றறிக்கை இல18/2021 ரத்து செய்யப்படும் என நாட்டின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.
இந்த சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் இருந்து சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த சுகாதார அறிக்கை அவசியம்.
மேலும்,
சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டுப் பிரஜை எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்பதைக் குறிக்கும் பாதுகாப்பு அனுமதி அறிக்கையும் அவசியம். எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சுகாதார பிரகடனம் மற்றும் பாதுகாப்பு அனுமதி அறிக்கை தொடர்பில் மாற்று செயல்முறைகளை அறிமுகப்படுத்துமாறு பதிவாளர் நாயகம் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.
இவ்வாறு வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் குறித்த வரையறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.