கனடாவில் பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்: பொலிஸார் முக்கிய தகவல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வணிக வளாகம் ஒன்றில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் Metrotown வணிக வளாகத்தில் கடந்த ஆண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் முக்கிய குற்றவாளி மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வடக்கு வான்கூவரில் வசித்து வந்த 25 வயதான மெலிசா பிளிம்கி என்பவரே கொலை செய்யப்பட்டவர். இவரது முன்னாள் காதலர் 31 வயதான Everton Downey மீது தற்போது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்னர் இருவரும் சில காலம் உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் திகதி Metrotown வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, படுகாயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவரை பொலிசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் தற்போது Everton Downey மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், மரணமடைந்துள்ள மெலிசா பிளிம்கியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், இந்த வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.