கனடாவில் ஆறு வயது கறுப்பின சிறுவன் மீது ஆசிரியரின் நிறவெறிச் செயல்
கனடாவில் ஆறு வயதான சிறுவன் ஒருவன் ஆசிரியரினால் இன ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆறு வயது சிறுவனை ஏனைய மாணவர்களுடன் சேர விடாது தனி அறையில் தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோவின் John Fisher Junior Public School பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் மீத நிறவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர், பாடசாலையின் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்பொழுது குறித்த மூவரும் வீட்டிலிருந்தே கடமைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியரின் செயற்பாடு கவலையளிப்பதாகவும், நம்ப முடியாதுள்ளதாகவும் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறு இன ரீதியான துன்புறுத்தல்களை தாமும் மகனும் பாடசாலை வளாகத்தில் அனுபவித்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.