மதுபானம் களவாடிய நபருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை
ஒன்டாரியோ முழுவதும் உள்ள எல்சீபிஓ LCBO கடைகளில் இருந்து 300,000 டொலருக்கும் அதிக மதிப்பிலான மது மற்றும் பொருட்களை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த நபர், மொத்தம் 110 திருட்டுச் சம்பவங்களில் சந்தேகநபராக இருந்ததாகவும், அதில் 10 கூவெல் (Guelph) நகரில் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024 மே 5 திகதி, குவெல்ப் பொலிஸ் விசாரணையாளர்கள், சந்தேகநபரை செயின்ட். கத்தரின்ஸ் பகுதியில் கண்டுபிடித்தனர்.

அப்போது அவர் மற்றும் மற்றொரு நபர், பல திருட்டுகளுக்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காரில் தூங்கிக்கொண்டிருந்தனர் எனவும் தப்பிச் செல்ல முயற்சித்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
27 வயது மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயது நபருக்கு கூடுதலாக ஆபத்தான வாகன ஓட்டுதல் குற்றமும் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் பல திருட்டு குற்றச்சாட்டுகள், மோட்டார் வாகனம் திருடல், ஆபத்தான ஓட்டுதல் மற்றும் ஆயுதத் தாக்குதல் உள்ளிட்ட நீண்ட பட்டியலான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இதன் அடிப்படையில் அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை (2024 மே மாதம் முதல் இருந்த காவல் காலம் கழித்து மதிப்பீடு செய்யப்படும்) வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 3 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.