பிரிட்டிஷ் கொலம்பிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக வளி மாசடைதல் தொடர்பில் எச்சரிக்கை; விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயுடன் வெப்பத்துடனான வானிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு மற்றும் வான்கூவா பகுதிகளில் வளி மாசடைதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல இடங்களில் காட்டுத் தீ பரவுகை கட்டுப்படுத்தப்படாத நிலையில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.