கனடா – அமெரிக்க உறவு விரிசலுக்கு டிரம்ப்பே பொறுப்பு சொல்ல வேண்டும்
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலுக்கு முழு காரணமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் சுசன் ஹோல்ட் தெரிவித்துள்ளார்.
நியூஃபௌண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரில், அட்லாண்டிக் கனடாவின் மூன்று மாகாண முதல்வர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்த சுங்க வரிகள், சக்தி வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோடையில் கனடியர்கள் அமெரிக்கா பயணம் குறைந்தது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டதாக ஹோல்ட் தெரிவித்துள்ளார்.
கனடாவை இணைத்துக்கொள்வது (annexation) குறித்த ட்ரம்ப் கருத்துக்கள் மீது கனடியர்களின் கோபம் தெளிவாக உணரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.