ஒன்ராறியோவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக லித்தியம்
வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே திறந்த குழி (open pit) முறையில் சுரங்கம் செய்யக்கூடிய வளங்களின் அருகே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பகிரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் (Logistics) மூலம் சுரங்கப்பணி எளிதாகும்.

ஆய்வக சோதனைகள்
ஜார்ஜியா லேக் (Georgia Lake) பகுதியில், லித்தியம் தாதுக்கள் பொதுவாகக் காணப்படும் பெக்மடைட் (pegmatite) கற்களில் இந்த வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
P&E Mining Consultants Inc. நிறுவனம், இந்த திட்டத்தின் மினரல் வள மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின் படி, 3.4 மில்லியன் short tons (indicated) 0.85 சதவீதம் Lithium oxide மற்றும் 5.8 மில்லியன் short tons (inferred) 0.91 சதவீதம் Lithium oxide உள்ளது. இங்கு காணப்படும் லித்தியம் தாது spodumene ஆகும்.
ஆய்வக சோதனைகள், இதனை 6 சதவீதம் Lithium oxide concentrate-ஆக மேம்படுத்த முடியும் எனவும், சுமார் 81.5 சதவீதம் மீட்பு விகிதம் (recovery rate) கிடைக்கும் எனவும் காட்டுகின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) 2025 அறிக்கையின் படி, உலகளவில் உற்பத்தியாகும் லித்தியத்தில் 87 சதவீதம் மின்கலங்களில் (Battery) பயன்படுத்தப்படுகிறது.