இலங்கை கிரிக்கெட் தேசிய குழாமில் இணைந்து கொள்ளும் வியாஸ்காந்த்
சுழற் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தேசிய கிரிக்கெட் அணியின் குழாமில் இணைந்து கொள்ள உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் வியாஸ்காந்தை தேசிய குழாமில் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
வியாஸ்காந்த், தற்பொழுது இலங்கை ஏ அணி பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் பங்கேற்றே வருகின்றார்.

இந்த போட்டி தொடர் கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற வருகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது இலங்கை தேசிய அணி பாகிஸ்தானில் ரி20 முத்தரப்பு போட்டி தொடர் ஒன்றில் பங்கேற்கிறது.
இந்த போட்டி தொடரில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் வியாஸ்காந்த் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் வியாஸ்காந்த்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கிரிக்கட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் வியாஸ்காந்த் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.