கனடாவில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இடைநிறுத்தப்படக்கூடிய அபாயத்தில்
கனடாவின், டொராண்டோவில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
டொராண்டோ பொது சுகாதாரத் துறை (TPH) இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சட்டப்படி கட்டாயமான தடுப்பூசிகளை பெறாத மற்றும் செல்லுபடியாகும் காரணங்களை வழங்காத 10,000-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20 நாட்கள் வரை பாடசாலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
2008-ல் பிறந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநீக்க உத்தரவு அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒன்பது கட்டாய தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டியது சட்ட ரீதியான ஓர் கடப்பாடாகும். டிப்தீரியா, டெட்டனஸ், பாலியோ, மீசில்ஸ், மம்ப்ஸ், ருபெல்லா, மெனிஞ்ஞோகோகல் நோய், பெர்டுசிஸ், மற்றும் 2010 பிறந்தவர்களுக்கு வரிசெல்லா போன்ற தடுப்பூசிகள் கட்டாயமாக ஏற்றப்பட வேண்டும்.
தடுப்பூசி பெறவில்லை என்றால் செல்லுபடியாகும் விலக்கு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சில மாணவர்கள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.