40 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்ற முதியவருக்கு கிட்டிய அதிர்ஸ்டம்
கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்ற முதியவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்த முதியவர் அண்மையில் ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
வின்ட்ஸோரைச் சேர்ந்த 72 வயதான ரெய்மன்ட் பொய்சன் என்ற நபரே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.
பணப்பரிசு வென்றெடுத்தமை குறித்த தகவல் தம்மை பெரு மகிழ்ச்சி அடையச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு காலத்திற்காக இந்த பணத்தைப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பணப்பரிசு தொகை மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்னும் பெரிய தொகை பணப்பரிசினை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.