கனடாவின் சட்பரி பகுதியில் கடும் கரப்பான் பூச்சித் தொல்லை
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள சட்பரி நகரில் அமைந்துள்ள பான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மருந்து தெளிப்பதற்குப் பதிலாக, கட்டடம் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திரண்டு நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தன் மகனுடன் வசித்து வரும் மிராண்டா தார்ன்டன் என்பவர், பூச்சிப் பொறிகளில் சிக்கிய கரப்பான் பூச்சிகளின் படங்களையும், கொசு வலைக்கூடாரத்திற்குள் உறங்கும் தன் மகனின் படங்களையும் பகிர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கரப்பான் பூச்சித் தொல்லை உள்ளது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் எனது வீட்டிற்கு மட்டும் வந்து மருந்து தெளித்தார்கள்.
ஆனால், முழு கட்டடத்திற்கும் தெளிக்காத வரை பூச்சிகள் மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.