கனடாவில் காலநிலை சீற்றத்தினால் பெரு நட்டம்
கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை, புயல், ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக பில்லியன் கணக்கில் காப்பீட்டு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொராண்டோவை மையமாகக் கொண்ட வானிலை பகுப்பாய்வு நிறுவனமொன்றும்கனடாவின் காப்பீட்டுப் பணியகமும் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாநிலங்களில் இரு நாட்கள் நீடித்த கடுமையான காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
2025-இல் இவ்விரு மாநிலங்களிலும் காப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பு சுமார் $760 மில்லியன் ஆகும். இதில் $430 மில்லியன் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மட்டுமே.
2021-ஆம் ஆண்டு முதல் இவ்விரு பிராந்தியங்களிலும் 30 பேரிடர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு $2.5 பில்லியனுக்கும் அதிகமானது.
கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக $1,000 காப்பீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஐந்து ஆண்டு காலக்கட்டத்தை விட 140 சதவீதம் அதிகம் ஆகும்.