அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து திடீர் முடக்கம் ; பயணிகள் கடும் பாதிப்பு
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக சிவில் விமானப் போக்குவரத்துக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதல்
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொடர்பாடல் பாதிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளிக்கையில், விமானப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் சைபர் தாக்குதலால் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், தொலைத்தொடர்பு கோளாறு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தால் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.