காவல்நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; பொலிசார் உட்பட 10 பேர் பலி!
Pakistan
Suicide Attack In Pakistan
Death
By Sundaresan
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 8 பொலிசார் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கபால் நகரில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பயங்கரவாத தடுப்புத்துறை அலுவலகமும், மசூதி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், திங்கட்கிழமையன்று அங்கு 2 முறை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தை அடுத்து அம்மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US