ரொறன்ரோவில் கை விலங்குடன் பொலிஸ் வாகனத்தை கடத்திய சந்தேக நபர்
ரொறன்ரோவில் கை விலங்கு இடப்பட்ட நிலையில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாருக்கு சொந்தமான வாகனமொன்றை இவ்வாறு கடத்திச் சென்றுள்ளார்.
கை விலங்கு இடப்பட்ட நிலையில் குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி, வாகனத்தை கடத்தியுள்ளார். வாகனம் கடத்தப்பட்ட போது அதில் இரண்டு பொலிஸ் நாய்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தப்பட்ட வாகனம் அருகாமையில் இருந்த வாகன தரிப்பிடமொன்றில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன் பின்னர் வாகனத்தை விட்டு வெளியேறி நிறுத்தி வைக்கப்பட்ட வாகமொன்றின் ஊடாக தப்பிச் செல்ல குறித்த சந்தேக நபர் முயற்சித்துள்ளார்.
டெக்ஸி ஒன்றை கடத்திச் செல்லவும் முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
டாக்ஸியை கடத்துவதற்கு முயற்சித்த போது டாக்ஸி சாரதி மற்றும் சந்தேக நபர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் வாகனம் எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.