சுவிஸில் அதிவேகமாக வாகனம் செலுத்தியவருக்கு 110,000 டாலர் அபராதம்
சுவிட்சர்லந்தின் லோஸென் (Lausanne) நகரில் வேக வரம்பைக் காட்டிலும் மணிக்கு 27 கிலோமீட்டர் கூடுதல் வேகத்தில் வாகனத்தை செலுத்தியவருக்கு 110,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லந்தின் ஆகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவருக்கே இவ்வாரு அபராதம் விதிக்கப்பட்டது. செல்வந்தர் வசிக்கும் வொட் (Vaud) வட்டாரம் வருமானம், சொத்து, குடும்பத்தின் பொதுவான நிதி நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் அபராதங்களை விதிக்கிறது.
மற்றொரு செல்வந்தருக்கு 290,000 டாலர் அபராதம்
2010ஆம் ஆண்டில் செயிண்ட் கெல்லன் வட்டாரத்தில் வேக வரம்பை மீறிய மற்றொரு செல்வந்தருக்கு 290,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
அதுவே சுவிட்ஸர்லந்தில் விதிக்கப்பட்ட ஆக அதிகமான அபராதம் ஆகும்.
முன்பு செல்வந்தர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறிய போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகக் குறைவு என்று Road Cross எனும் சாலைப் பாதுகாப்புக் குழு கூறியது.
அந்த நிலைமையை மாற்றப் புதிய மசோதா அறிமுகமானது. அதில் அபராதம் ஒருவரின் செல்வத்தைப் பொறுத்து அமைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுவிட்சர்லந்து மக்கள் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.