வீட்டுக்குள் குவிந்து கிடந்த குப்பைகள்; பிரான்ஸில் நபரின் உயிரைப்பறித்த விநோத நோய்
பிரான்ஸ் - பாரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் வசித்த 62 வயதுடைய ஒருவர் விநோத நோய்த்தாக்கத்தால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆம் வட்டாரத்தின் rue Grappelli வீதியில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் திடீரென தீப்பிடித்துள்ளது.
பிரான்சில் முதன் முறையாக கண்டறியப்பட்ட நோய்
தீ பரவியதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலையில், நிலமை கைமீறிச் சென்றிருந்தது. அங்கு வீட்டில் தனியாக வசித்த 62 வயதுடைய நபர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
அவர் 'தனிமையை' விரும்பும் syndrome de Diogène எனும் நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.
அதோடு வீட்டு முழுவதும் குப்பை கூழங்களை சேகரித்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்த ஏதோ ஒன்றே தீ பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எந்த ஒரு பொருளையும் வீசாமல், அதனை சேகரித்து வைக்கும் விநோத பழக்கம் கொண்டவர்களையே "syndrome de Diogène" நோயாளர்கள் என சொல்லப்படுகிறது.
அதேவேளை உலகம் முழுவதும் பல நூறு பேர் இந்த நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 1966 ஆம் ஆண்டு பிரான்சில் முதன் முறையாக இந்த நோய் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.