விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் பகீர் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் படுவதாகவும்.
அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், குடும்பத் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடும் உரிமையோ, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்த துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து பிரிந்து செல்லும் உரிமையோ இல்லாத மோசமான நிலையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள் என ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, 10ல் ஒன்பது ஆப்கான் பெண்கள் தங்கள் துணையிடமிருந்து உடல், பாலியல் அல்லது உளவியல் ரீதியான வன்முறையை அனுபவிக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.