நேரடியாக சந்தித்துக்கொண்ட உலகின் மிக உயரமான ஆண் – மிக குள்ளமான பெண்
உலகிலியே மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். இதேவேளை உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக ஜோதி ஆம்கே அறியப்படுகிறார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி கொண்டுள்ளனர்.
2009-ம் ஆண்டில், 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சுல்தான் கோசென் சாதனை படைத்தார்.
அதே ஆண்டு, உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் ஜோதி ஆம்கேக்கு வழங்கப்பட்டது.
அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும் போது, மீண்டும் அளவிடப்பட்ட போது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு எகிப்தில் சந்தித்தனர்.
இதனைத்தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பின்பு இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மீண்டும் தற்போது சந்தித்து கொண்டனர். அதனுடன் இருவரும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.