பிரான்ஸில் விவாகரத்து பெற்றதாக நாடகமாடிய இலங்கை தமிழ் தம்பதி; அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்
பிரான்ஸ் வொண்டி (Bondy) பகுதியில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 39 வயது ஆணும், 36 வயது பெண்ணும் அரச சலுகைகளை (Benefits)ஏமாற்றிப் பெறுவதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
போலியாக விவாகரத்து
சட்டபூர்வமாகத் திருமணம் முடித்த இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் 'தனிநபர் பெற்றோருக்கான' (Single Parent) உதவித்தொகையைப் பெறுவதற்காகப் போலியாக விவாகரத்து (Fake Divorce) செய்துகொண்டனர்.

விவாகரத்து பெற்றதாகக் காட்டி, கணவன் ஒரு வீட்டிலும் மனைவி ஒரு வீட்டிலும் தனித்தனியாக வசிப்பதாகப் பதிவு செய்து, இருவருக்கான அரச வீட்டு வாடகை மானியத்தையும் (Housing Benefit) பெற்றுள்ளனர்.
கைதான கணவன் தனது பெயரில் உள்ள வீட்டை விசா இல்லாத அகதிகளுக்குச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் அவருடன் இரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் மூலம் அரச மானியம், சட்டவிரோத வாடகை வருமானம், பிள்ளைகளுக்கான பராமரிப்புத் தொகை எனப் பெரும் தொகையைச் சுருட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு அதிரடியாகச் சோதனையிட்ட பிரான்ஸ் பொலிஸார், கணவன் - மனைவியை ஒரே வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
அதேவேளை பிரான்ஸில் மட்டுமல்லாது பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளிலும் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.