போரில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்
போரில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதனை நிறுத்தப்போவதில்லை என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ தெரிவித்துள்ளார்.
தமிழின படுகொலை நினைவேந்தேல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கல் உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்தனர்.
தமிழின படுகொலை நினைவேந்தல் நாளை அனுஸ்டிப்பது தொடர்பில் கனடிய நாடாளுமன்றில் கடந்த ஆண்டு ஏக மனதாக விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரில் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சிலருக்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மதச் சுதந்திரம் பன்மைத்துவம் என்பனவற்றை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழ் கனடியர்கள் கனடாவிற்கு வழங்கி வரும் பங்களிப்பினை அங்கீகரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.