கனடாவில் கோடிக்கணக்கில் பணப்பரிசை வென்ற தமிழ் பெண்!
கனடாவில் லொட்டரியில் மிகப்பெரும் பணப்பரிசை தமிழ் பெண் ஒருவர் வென்றுள்ளார்.
ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்த 47 வயதான சீலாவதி செந்தில்வேல் என்ற 3 குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரில் பங்கெடுத்து வரும் நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் இரண்டாம் பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) பணப்பரிசை வென்றுள்ளார்.
இது குறித்து சீலாவதி தெரிவிக்கையில், நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என store-க்கு சென்று பார்த்தேன்.
அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் 'பிக் வின்னர்' என பார்த்தபோது, மிகவும் உற்சாகமடைந்தேன். என் உடலே நடுங்கியது. உடனடியாக என் மகனிடம் இந்த மகிழ்ச்சி தகவலை சொன்னேன். எங்கள் இருவராலும் இதை நம்ப முடியவில்லை.
பரிசு பணத்தை வைத்து உடனடி திட்டங்கள் எதுவும் போடவில்லை, இருப்பினும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.